100 மில்லியன் ரூபாய் வரியை செலுத்தாமல் அதிசொகுசு காரை இறக்குமதி செய்த மைத்திரியின் சகோதரர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், அரலிய அரசி நிறுவன உரிமையாளர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன, இலங்கைக்கு சொகுசு ரோல்ஸ் ரோய்ஸ் காரை இறக்குமதி செய்துள்ளார்.
இந்த Rolls-Royce Phantom Series 8 II மிகவும் விலையுயர்ந்த காராகும். குறித்த அதிசொகுசு காரியின் பெறுமதி 212 மில்லியன் ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது.
விமான சரக்கு மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரோல்ஸ் ரோய்ஸ், பயன்படுத்தப்பட்ட வாகனமாக சுங்கத்துறையிடம் காட்டப்பட்டது. எனினும் இது 100 கிலோமீட்டருக்கும் குறைவாகவே ஓட்டப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ரோய்ஸ்
இதை எவ்வாறு பயன்படுத்தப்பட்ட வாகனமாக வகைப்படுத்த முடியும் என சுங்க அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாய் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. டட்லி இன்னும் அந்தத் தொகையை செலுத்தவில்லை.
எனினும் வாகனத்தை விடுவித்ததாகவும், விரைவில் அதை அவர் செலுத்துவார் எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.