நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் புதிய வரிகள் : ஜனாதிபதியின் நிலைப்பாடு வெளியானது
நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச வருமானம்
அங்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,
அரசாங்கம் வருமானத்தை அதிகரித்து விரைவாக வருமான இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.
மேலும் இந்நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது, இது அரசியல் பிரச்சினை அல்ல என்பதை நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியும் தெளிவாகக் கூறியுள்ளார்.
தற்போதுள்ள முறையில் வருமான வரி செலுத்தாதவர்களிடமே வருமான வரி அறவிடப்படுகின்றது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan
