சர்ச்சைக்குரிய பிக்குவாக சர்வதேச செய்திகளின் தலைப்புக்களில் இடம்பிடித்த ஞானசாரர்
இலங்கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கொள்கைக்கான வரைபை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணி தொடர்பில் சர்வதேச செய்தி நிறுவனங்கள் பல்வேறு தலைப்புக்களில் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் த ஹிந்து, “தீவிரப்போக்குக் கொண்ட பிக்கு, சட்ட மீளாய்வு தொடர்பான குழுவுக்கு தலைவர்” என்ற தலைப்பை வழங்கியுள்ளது.
சிங்கப்பூரின் த ஸ்டெய்ர்ஸ் டைம்ஸ், “சர்ச்சைக்குாிய பிக்கு, சட்ட மீளமைப்பு குழுவுக்கு தலைமை” என்ற தலைப்பை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் 24 என்ற செய்தித்தளம், “சர்ச்சைக்குரிய பிக்கு சட்ட வரைப்புக்கான குழுவுக்கு தலைமை” என்ற தலைப்பை தீட்டியுள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு, வன்முறையை துாண்டியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த பிக்குவே இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் தனி ஆள் முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய சில நாட்களிலேயே ஞானசார தேரர் தலைமையில் குழு அமைகிறது.
இதேவேளை ஞானசாரரின் குழு தொடா்பில் கருத்துரைத்துள்ள இலங்கை மனித உாிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் (Ambika Satkunanathan), இந்த நியமனம், ஒரு முகமூடித்தனமான கேலிக்கூத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஞானசாரர் (Galagoda aththe Gnanasara Thero) தலைமையிலான இந்தக்குழு, தமது வரைபை எதிர்வரும் 2022 பெப்ரவரி 28ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும் என்று அது தொடா்பான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri