உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS)

Mullaitivu Vavuniya Sri Lanka
By Varunan Apr 29, 2023 12:03 PM GMT
Report

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவாரம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் இன்று (29.04.2023) அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாள் சங்க தலைவர்வா. கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் மற்றும் சிவில் அமைப்பினர் கலந்துகொண்டு அன்னாரது உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu 

செய்தி: பவன்

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18 வது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (29) கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் எழுச்சி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

யாழ்ப்பபாணம் 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 16ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நினைலுக்கூரப்பட்டது. 

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த அடையாளந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு , படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

செய்தி: தீலிபன்

முதலாம் இணைப்பு 

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (28.04) மாலை உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது சடலம் நாடாளுமன்றத்துக்கு அருகில் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

வவுனியா

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 18 ஆவது நினைவுதினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (28.04.2023) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது தராக்கியின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டது.

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

அத்துடன்,  ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04.2023) இடம்பெற்றது.

வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் அமையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற  நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் மற்றும் வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர் கி.வசந்தரூபன் ஆகியோரினால் தராக்கி சிவராம் தொடர்பில் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் (PHOTOS) | Taraki Sivaram 18Th Anniversary Tribute Mullaitivu

இதன்போது, தராக்கி சிவராம் கொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை எனவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நீதியான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் நாடாளுமன்றம் ஊடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். 

அத்துடன், தற்போது நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் ஊடகவியலாளரின் செயற்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதற்கு எதிராக  ஊடகவியலாளர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது எனவும் புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US