கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்!

Mahinda Rajapaksa Namal Rajapaksa Carlton House - Tangalle
By Kanthan Aug 12, 2026 08:04 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,

எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்  நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து

அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.

கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்! | Tangalle Carlton House Namal Rajapaksa  

ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை. எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன.

அதேபோல் நான் ஒரு காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத் தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020 வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்  சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.

கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்

மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.

இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.

அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம் அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும் ஒருவன் நான்.

ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம் என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்  நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

வெளிச்சத்திற்கு வந்த பாதாள உலகத்தின் அரசியல் தொடர்புகள்..! மரண தண்டனை மீண்டும் நடைமுறையாகுமா..

வெளிச்சத்திற்கு வந்த பாதாள உலகத்தின் அரசியல் தொடர்புகள்..! மரண தண்டனை மீண்டும் நடைமுறையாகுமா..

ஜேவிபியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் உறவினர் அதிரடியாக கைது..!

ஜேவிபியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் உறவினர் அதிரடியாக கைது..!

  

மகிந்தவுக்காக உயிரை கொடுப்பேன்.! நாமலின் மக்கள் சந்திப்பில் வெடித்த சர்ச்சை

மகிந்தவுக்காக உயிரை கொடுப்பேன்.! நாமலின் மக்கள் சந்திப்பில் வெடித்த சர்ச்சை

  

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US