பின் சிந்தனையின் அடிப்படையில் நடத்தப்படும் தமிழர்கள்! - சுமந்திரன் எம்.பி ஆதங்கம்
இலங்கையில் தமிழர்கள் பின் சிந்தனையின் அடிப்படையிலேயே நடத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் 13வது திருத்த கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திடம் கூறியுள்ளார்.
அப்படியானால் இந்த நீதித்தறையின் அதிகாரங்களும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது மத்திய அரசாங்கம் மாகாண அதிகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலேயே ஒரே நாடு ஒரே சட்டம் அமையும். எனவே சுயமரியாதை கொண்ட தமிழர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் அங்கம் வகிக்கமாட்டார்கள்.
அந்த வகையில் குறித்த செயலணிக்கு தமிழர்கள் முன்னதாக தெரிவுசெய்யப்பட்டாத நிலையில், பின் சித்தாந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் தமிழர்கள் பின் சிந்தனையில் அடிப்படையிலேயே நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
