பலவழிகளில் தமிழர்களின் இருப்பினை அழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுகிறது! த.கலையரசன் (Video)
''ஆயுதப்போராட்டத்தினை காட்டி தமிழர்களை அழித்த இந்த நாட்டின் அரசுகள் இன்று பல வழிகளில் தமிழர்களின் இருப்பினை அழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக'' அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழர்கள்
‘‘இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அதற்கு அடையாளமாக ஆலயங்களும் புராதன சின்னங்களும் காணப்படுகின்றன.
ஆனால் அவை அனைத்தையும் தங்களுடையதாக மாற்றிவிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக எமது வரலாற்று சின்னங்களையும் வாழ்வுரிமையினையும் அழிப்பதற்கு இந்த அரசு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
இந்த நிலைமையெல்லாம் மாறவேண்டும். ஒரு ஆயுதபோராட்டம் இருந்தபொழுது பல காரணங்களை காட்டி தமிழர்களை அடக்கி அழித்தார்கள். ஆனால் இப்போது அந்த ஆயுதப்போராட்டம் இல்லாத சூழலிலே தொல்பொருள் என்ற அடிப்படையிலும் வனஇலாகா என்ற அடிப்படையிலும் வன பாதுகாப்பு என்ற வகையான பல விடயங்களை தமிழர்கள் மீது திணித்து தமிழர்களின் தொன்மைகளை கபளீகரம் செய்யும் சூழல் இருந்துவருகின்றது.

இதுவொரு பிழையான எண்ணம்
அம்பாறை மாவட்டத்தில் மூன்று மாகாணசபை உறுப்பினர்கள் இருந்தார்கள். மாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருந்தார். அந்தவேளையில் எமது நிலம் பாதுகாக்கப்பட்டிருந்ததா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
அந்த அதிகாரம் இருந்தகாலத்தில் எதனையும் செய்யமுடியாத அரசியல்வாதிகள் இப்போது இந்த மாவட்டத்தில் எதனை சாதிக்கப்போகின்றார்கள்.
சில விளையாட்டுக்கழகங்கள் அவரை அழைத்து அவரை கௌரவப்படுத்துவதும் ஏதோவொன்றை அவர் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள். இதுவொரு பிழையான எண்ணம்.
இந்த அரசாங்கம் எந்தவித அபிவிருத்தியையும் செய்யமுடியாத நிலையில் தத்தளித்துவருகின்றது. அவ்வாறான சூழ்நிலையில் எங்களது உறவுகள் இன்னுமொரு பிழையான வழியை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.நாங்கள் பட்டறிந்தவர்கள். இன்னும் எங்களை ஏமாற்றமுடியாது‘‘ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 10 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam