தமிழர்கள் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய இக்கட்டான காலத்தில் உள்ளனர்: தி.சரவணபவன் (Video)
பொருளாதார நெருக்கடியான இந்த காலத்தில் தமிழர்கள் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய இக்கட்டான காலத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைமையகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
தற்சார்பு பொருளாதாரம்
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்சார்பு பொருளாதாரத்தினை முன்னெடுக்கும்போது எங்களுக்கு தேவையானவற்றை நாங்களே உற்பத்திசெய்யும் வகையிலும் அதன்மூலம் எமது பொருளாதாரத்தினை ஓரளவு பூர்த்தி செய்யக்கூடியதாகயிருக்கும்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெற்றுக்காணியிலும் பயிர்செய்கையினை ஊக்குவிக்கும் வகையிலும் அதன்மூலம் தமது தேவையினை பூர்த்திசெய்யும் வகையிலான திட்டத்தினை முன்னெடுப்பது குறித்த மாநகரசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஓரளவாவது உற்பத்திகளை மாநகருக்குள் பெறுவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் ரொமிலா செங்கமலனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் க.வரதராஜன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,பிரதிச்செயலாளர் நடனசபேசன் உட்பட அமைப்பின் கிழக்கு மாகாண நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.




உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam