சிங்கப்பூரில் தமிழ் இளைஞர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் தமிழகத்தினை சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரில் கட்டடம் இடிப்பு பணியின் போது, கொன்கிறீட் சுவரொன்று இடிந்து விழுந்ததில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளரான வினோத் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
நிதியுதவி
கடந்த 2022 ஆண்டு செப்டெம்பர் மாதம் சிங்கப்பூருக்கு சென்ற இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், தஞ்சோங் பாகர் என்ற இடத்தில் கட்டடமொன்றின் பகுதியை இடிக்கும் போது அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது கட்டட இடிபாடுகளில் சிக்கிய இளைஞரை, ஆறு மணி நேர தேடலுக்குப் பின்னர் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த வினோத்தின் குடும்பத்தினருக்கு நிதி உதவியளிப்பதாக, சிங்கப்பூரில் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான, புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |