பிரித்தானியாவில் கோர விபத்தில் உயிரிழந்த தமிழ் பெண்கள்! இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தமிழ் பெண்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 9 ஆம் திகதி கனடாவில் மார்க்கத்தில் உள்ள ஐலன்ஸ் ஹில் மலர்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் விபரம்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பெண்களும், காரை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினர் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து பிரித்தானியா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தமிழ் பெண்களான தாயும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
