வெளிநாடொன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட தமிழருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை
சிங்கப்பூரில் மதுபோதையில் பேருந்துகளில் ஏறி அட்டகாசம் செய்த இந்தியரொருவருக்கு 5 வாரங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 65 வயதுடைய மூர்த்தி நாகப்பன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி மதுபோதையில் பேருந்துகளில் ஏறி, முகக்கவசத்தை சரியாக அணியாமல் நடத்துனருடன் முரண்பட்டுள்ளதுடன்,பயணிகளிடம் மோசமான முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து பேருந்தின் சாரதி அளித்த புகாரின் பேரில் மூர்த்தி நாகப்பனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விசாரணையில் மூர்த்தி நாகப்பன் இதற்கு முன்னரும் 2 முறை இதே போல் மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என்பதும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மூர்த்தி நாகப்பன் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam