முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிதைக்கப்படும் தமிழர் அடையாளங்கள்! திமுக முதன்மை செய்தித் தொடர்பாளர்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நினைவுக்கல் இரவோடிரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நினைவுத்தூபியும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணியும் திமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளருமான கே.எஸ்.ராதாகிருஸ்னண் தகவல் வெளியிட்டுள்ளார்.
நேற்று இரவு முழுவதும் இராணவத்தின் தடை பகுதியாக குறித்த பகுதியை அறிவித்ததுடன் எவரையும் குறித்த பகுதிக்குள் உள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை, நேற்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்து.
எதிர்வரும் மே 18 அன்று நினைவேந்தல் திட்டமிட்டபடி சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என பொது கட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாசகம் பொறிக்கப்பட்ட பொது நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்படுவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த நிலையிலே அது காணாமல் போயுள்ளது.




காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
