13 ஆவது சட்டத்தை மேலும் வலுவாக கொண்டு செல்லமுடியாமைக்கு தமிழ் தரப்பினரே காரணம்: தவராசா குற்றச்சாட்டு(Photos)

Jaffna Tamilpeople Northernprovince 13thamendment
By Kanamirtha Feb 28, 2022 06:31 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

தமிழ் மக்களுக்கான 13 ஆவது அதிகாரத்துடன் கூடிய சட்டத்தை மேலும் வலுவாகக் கொண்டு செல்லமுடியாமைக்குத் தமிழ் தரப்பினரே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர் என்பதே வரலாறு என வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் 13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தைப் பலப்படுத்தி அதனூடாக மாகாணசபைகளைப் பாதுகாப்பது தொடர்பான பொதுக் கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(27) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

''சந்திரிகா அம்மையாரது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை முற்றாக பூரணப்படுத்தக் கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு திறமையான வரைபு எரிக்கப்பட்டது. குறித்த வரைபை அன்று எதிரணியிலிருந்து எரித்தவர்களின் நிலைப்பாட்டைத் தவறென்று நான் கருதவில்லை.

ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறும் தரப்பினரும் அந்த வரைபை அன்றைய எதிர்த்தரப்பினருடன் இணைந்து எரித்திருந்தனர். அதை அன்று நான் நேரில் கண்டேன். இது மிகவும் ஒரு துரதிஸ்டவசமானதும் மாபெரும் தவறுமாகும்.

இதையடுத்து அந்த வரைபு கைவிடப்பட்டது. அதன்பின்னர் பல முயற்சிகள் யோசனைகள் வந்திருந்தபோதும் கடந்த ஆட்சியில் தமிழர்களுக்கு எல்லா உரிமையும் வருகின்றதெனக் கூறி ஒன்றைக் கொண்டுவந்தார்கள் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

ஆகவே தமிழ் மக்களுக்கான 13 ஆவது அதிகாரத்துடன் கூடிய சட்டத்தை மேலும் வலுவாக கொண்டு செல்ல முடியாமைக்கு தமிழ் தரப்பினரே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர் என்பதே வரலாறு. இந்த நிலையில் தீர்வு திட்டங்கள் நடைமுறையில் வருவதற்கான வாய்ப்புள்ளதா என்பதை நாம் ஆராய்ந்துகொள்ள வேண்டும்.

அதேநேரம் இருக்கின்றதைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும். இதேவேளை இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஒரு முக்கிய விடயமும் இருக்கின்றது.. அதை தமிழ் தரப்பினர்தான் கைநழுவ விட்டுள்ளனர் என்றே கருதுகின்றேன். அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீட்டிப் பாருங்கள்.

அதில் ஒரு சரத்தில் குறிப்பிட்ட திகதியொன்றை வரையறுத்து அத்திகதியிலிருந்து ஆயுதம் தாங்கிய தரப்பினர் அல்லது குழுவினர் தமது ஆயுதங்களை ஒப்படைத்தால் இலங்கை இராணுவம் குறிப்பாக முப்படையினரும் முகாம்களுக்குள் முடக்கப்படும் என்றுள்ளது.

இதை தவறவிட்டது யார்? சுதந்திரத்திற்குப் பின்னர் வேறு வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளாக இருந்தாலும் பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் என்பன ஏற்பாடு செய்யப்பட்டது. அவையும் இல்லாது போய்விட்டது. ஆனாலும் அவற்றை விட ஒரு முன்னேற்றகரமான ஏற்பாடாகத்தான் இந்த 13ஆவது திருத்தச்சட்டம் இருக்கின்றது.

இதை நாம் இறுகப்பிடித்தோமா? என்றால் இல்லை. இதேநேரம் இந்த சட்டமூலத்தின் ஏற்பாட்டில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் இருப்பதையாவது பாதுகாப்போம் என்றால் அதுவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு ஒருவருடத்திற்குச் சற்று கூடுதலாக சில மாதங்களே அது நடைமுறையிலிருந்தது.

அதன்பின்னர் 25 ஆண்டுகள் வடக்கு, கிழக்கில் மாகாணசபை இயங்கவில்லை. ஏனைய மாகாணங்கள் இயங்கின. ஆனாலும் அதிலுள்ள அதிகாரத்தை வலுவாக்க அவர்கள் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மாகாண சபையை எப்போது ஏற்று நடைமுறைப்படுத்துவார்கள் என்றுதான் காத்திருந்தனர்.

இந்நிலையில் இக்காலத்தில் மாகாணத்துக்குரிய விடயங்கள் பலவற்றை மத்தி மெல்ல மெல்லத் தனதாக்கிக் கொண்டது. இதனிடையே 25 வருடங்களின் பின்னர் மாகாணசபை அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் அதன் அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்தார்கள்?

அதன் அதிகாரத்தை வலுவாக்குவதில் என்ன பங்களித்தார்கள்? வெறுமனே 440 பிரேரணைகளைக் கொண்டுவந்து நிறைவேற்றியதைத் தவிர வேறென்ன செய்தார்கள்?  மாகாண சபையின் அதிகாரத்தை முழுமையாகக் கொண்டுவர என்ன முயற்சிகளைச் செய்தார்கள்? எதுவுமே இல்லை.

இது வடக்கின் ஆட்சியாளர்கள் கண்ட தோல்வி அல்லது தவறவிட்ட சந்தர்ப்பம் என ஒப்புக்கொள்ள வேண்டும். சரியானவர்களை அந்த மாகாணசபைக்குத் தெரிவு செய்து சரியான வகையில் 13 ஆவது சடடத்தில் உள்ளவற்றை உள்வாங்கி அதை எமக்கு ஏற்புடையதாக்கும் வல்லமை மட்டுமல்ல அதில் அக்கறையும் அவர்களிடம் இருந்திருக்கவில்லை.

இதுவும் எமது தமிழ் மக்களின் தோல்வியாகவே காணப்படுகின்றது. சரி அதிகாரங்களை இழந்துவருகின்ற நிலையிலும் இருக்கின்ற அதிகாரங்களையாவது பாதுகாப்போம் என்றால் கூட அதற்கும் அக்கறை காட்டவில்லை. இதேவேளை இலங்கை அரசியல் சாசனத்தின்படி மாகாணசபை கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என இருக்கின்றது.

அப்படியானால்’ ஏன் தேர்தல் நடைபெறவில்லை? இதற்கு காரணம் என்ன? கடந்த ஆட்சியாளர்கள் மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என கூறி அதில் எல்லை மீள் நிர்ணயம் என்ற ஒன்றைக் கொண்டுவந்தது. அதை மேற்கொள்ளக் குழு ஒன்றை அமைத்தனர்.

அவ்வாறு சட்ட ஏற்பாட்டைச் செய்திருந்தால் துறைசார் அமைச்சர் அதை இரு வாரங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருப்பார். சரி அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அதில் அது தோல்வி கண்டிருந்தால் அதற்கும் சட்ட ஏற்பாடு இருக்கிறது. அதுவும் நடைபெறவில்லை.

இதைவிடுத்து மாகாணசபையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறைக்குப் பங்காளர்களாக இருந்ததும் இன்று பறிபோகின்றது எனக் கூக்குரல் இடும் தமிழ் தரப்பினர்தான் என்பதே வேதனையானது.

அதைவிட மாகாண சபை தேர்தல் நடைபெற வேண்டும் எனக் கடந்த ஆட்சியிலிருந்த தமிழ் தரப்பினர் நினைத்திருந்தால் குறைந்தது அதை நிறைவேற்றப் பாதீடுகளில் பேரம் பேசியிருந்திருக்கலாம் அதையும் செய்திருக்கவில்லை.

இவையே இந்த மாகாணசபை முறைமை அதிகாரங்கள் பறிபோகக் காரணமாகியிருந்துள்ளது. இந்நிலையில் இன்று பாரத பிரதமருக்குக் கடிதம் எழுதுவதால் என்ன பலன் கிடைக்கப்போகின்றது'' என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி த.விக்னராஜா ஆகியோர் உட்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US