அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற இலங்கையின் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணமானார் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் பேச்சாளரான அரன் மயில்வாகனம் 48வயதான குறித்த நபரான இன்று காலை தூக்கத்திலேயே மரணமடைந்தாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வசிக்கும் மனைவி, மகன்
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அவரின் மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு விட்டதாக அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.
ரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் 25 வயது மகனும், மனைவியும் இலங்கையில் வசிக்கின்றனர்.
இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணம்
இதேவேளை நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் காரணமாக அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள்
மரணமடைந்தனர் என்றும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri

தோழியை கொலை செய்தது ஏன்? ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் News Lankasri

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan
