லண்டனில் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்த தமிழர்
லண்டனில் தமிழர் ஒருவர் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் ( Nandakumar) என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இவர் பொறியியல் படிப்பு முடித்தவுடன் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக நிறுவனம் ஒன்று தொடங்க திட்டமிட்டு லண்டனில் 'Kovaion' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனம் லண்டனில் மட்டும் இல்லாமல் சென்னை, பெங்களூர், அமெரிக்கா என பல கிளைகளை கொண்டு சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து நந்தகுமார் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
2011ஆம் ஆண்டு தனியாக தொழில் தொடங்க எண்ணி Kovaion நிறுவனத்தை தொடங்கினேன். ஆரம்ப காலத்தில் தனி ஒருவராக செயல்பட்ட நான், ஒரு வருடத்திற்கு பிறகு படிப்படியாக தொழிலாளிகளை உயர்த்தினேன்.
ஆரக்கிள் நிறுவனத்தின் சாப்ட்வேர் பல நிறுவனங்களுக்கும் தேவைப்படும். அப்படிப்பட்ட நிறுவனங்களை கண்டுபிடித்து customize செய்வது தான் எங்களுடைய முதற்கட்ட பணி.
ஆரம்பத்தில் ஒரிரு நிறுவனங்களுக்கு மட்டுமே சேவைகள் வழங்கி வந்த நிலையில் தற்போது 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தை தேடி படையெடுத்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் புதிய நிறுவனமாக இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கை சார்ந்த பிரச்சினை இருந்தது. ஆனால் அதன் பிறகு எங்கள் எண்ணம் முற்றிலுமாக மாற தொடங்கி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இருந்தது.
அந்தவகையில் Kovaion தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 50 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து ஆண்டு வருமானம் 3 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு மேல் கிடைப்பதாக நந்தகுமார் தெரிவித்தார்
Nandakumar இந்தியாவின் சிறிய கிராமத்தில் பிறந்து, சர்வதேச அளவில் பிரபல தொழில் அதிபராக உயர்ந்து தமிழத்துக்கு பெருமையை சேர்த்துள்ளார்.
you my like this video
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan