விடுதலைப்புலிகளின் தலைவர் போன்றே தமிழ் மக்களை வழிநடத்தும் தாயக அரசியல்வாதிகள்: தேரர் குற்றச்சாட்டு

Jaffna Ranil Wickremesinghe LTTE Leader Northern Province of Sri Lanka
By Renuka Jun 18, 2023 12:09 PM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரைப் போன்றே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை தவறான பாதைக்குக் கொண்டு செல்வதாகத் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் (17.06.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புராதன பௌத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் மக்களைக் குடியேற்றுவதற்காகத் தமிழ் அரசியல்வாதிகள் தவறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், அதற்கு இணக்கம் வெளியிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாவத்தைச் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் போன்றே தமிழ் மக்களை வழிநடத்தும் தாயக அரசியல்வாதிகள்: தேரர் குற்றச்சாட்டு | Tamil Politicians Like The Leader Of The Ltte

தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டாம்

மேலும், குருந்தூர், திரியாய ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை மற்றும் திரியாய ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருளியல் திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதைத் தவிர்த்து அதற்கு உரித்துடைய தமிழ் மக்களிடத்தில் கையளிக்க வேண்டுமென ஜனாதிபதி கடந்த 8ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் நடத்திய சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்த தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்கவிடத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பேராசிரியர் அனுர மனதுங்க தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், குறித்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி எல்லாவல மேதானந்த தேரர் கடந்த 13ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் போன்றே தமிழ் மக்களை வழிநடத்தும் தாயக அரசியல்வாதிகள்: தேரர் குற்றச்சாட்டு | Tamil Politicians Like The Leader Of The Ltte

ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம்

இதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் குறித்த காணிகளை வழங்கப்போவதில்லை என்றும் காணிகள் பற்றிய விடயத்தினை முழுமையாக ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் தேரருக்கு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் பின்னணியிலேயே எல்லாவல மேதானந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குருந்தூர் விகாரை மற்றும் திரியாய விகாரை தொடர்பில் நான் ஜனாதிபதிக்கு தெளிவான கடிதமொன்றை அனுப்பியுள்ளேன்.

அதற்கு அவரது செயலாளர் ஊடாக பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் பிரகாரம் அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் பின்பற்றப்படும் என்றும் நம்புகின்றேன்.

மேலும், குழு அமைத்து ஆராய்வதற்கு எந்தவொரு சர்ச்சையான விடயங்களும் அங்கு இல்லை என்பதை இங்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் போன்றே தமிழ் மக்களை வழிநடத்தும் தாயக அரசியல்வாதிகள்: தேரர் குற்றச்சாட்டு | Tamil Politicians Like The Leader Of The Ltte

வழிபாடுகளைச் செய்ய முடியாது 

நான் குருந்து மலைக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளேன். அங்கு வரலாற்றில் பல தம்மபத வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. ஆகவே, அந்த புராதன விகாரைக்குச் சொந்தமான பாரியளவிலான நிலங்கள் காணப்படாமல் அவ்விதமான வழிபாடுகளைச் செய்ய முடியாது. 

மேலும், புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அந்தச் சின்னங்கள் உலக மரபுரிமைகளாக மதிக்கப்பட வேண்டியவை. அவ்வாறான நிலையில், குருந்து மலையைச் சூழவுள்ள நிலங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்குவது பொருத்தமற்ற செயற்பாடாகும். அதனை வழங்காதிருப்பது தான் மிகச் சரியான விடயமாகும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை. நான் கூட அந்த மக்களை நேரில் சென்று பார்த்து உதவிகளை வழங்கிய ஒருவர் தான். ஆனால், அவர்களுக்கு காணிகள் தேவையாக இருந்தால் பிறிதொரு இடத்தில் வழங்க முடியும். அதற்குரிய வசதிகளும் முல்லைத்தீவில் காணப்படுகின்றன.

விடுதலைப்புலிகளின் தலைவர் போன்றே தமிழ் மக்களை வழிநடத்தும் தாயக அரசியல்வாதிகள்: தேரர் குற்றச்சாட்டு | Tamil Politicians Like The Leader Of The Ltte

இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்

உண்மையில் குருந்தூர் மலையைச் சூழவுள்ள காணிகளைத் தமிழ் மக்கள் கோரவில்லை. அதனைக் கோருவது தமிழ் அரசியல்வாதிகள் தான். இவர்கள் தான் திரியாய விகாரைக்குச் சொந்தமான காணிகளையும் கோருகின்றார்கள். திரியாயவும் புத்த பெருமானுடன் நேரடியாக தொடர்புபட்ட வரலாற்றுப் பிரதேசமாகும்.

அவ்வாறு இருக்கையில், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த புராதன இடங்களைச் சிதைக்கும் வகையில் காணிகளைக் கோருகின்றார்கள். இவர்கள் உண்மையிலேயே பிரிவினையைக் கோரிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதையிலேயே செல்கின்றார்கள்.

அந்த தவறான பாதையில் தான் தமிழ் மக்களையும் கொண்டு செல்வதற்கு முனைகின்றார்கள்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட அரசாங்கம் மிகவும் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். 

விடுதலைப்புலிகளின் தலைவர் போன்றே தமிழ் மக்களை வழிநடத்தும் தாயக அரசியல்வாதிகள்: தேரர் குற்றச்சாட்டு | Tamil Politicians Like The Leader Of The Ltte

பெளத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகள்

இந்த நாட்டில் மீண்டும் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் மக்களுக்காகக் காணிகளைக் கோருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் அந்த மக்களுக்காக எதனையும் செய்யவே இல்லை. அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவிகளை வழங்காது, அந்த மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திப் பிரிவினை அரசியல் செய்வதற்கே முனைகின்றார்கள். 

அதேநேரம், பௌத்தர்கள் அல்லாத எவரையும் பௌத்த விகாரைகளை சூழவுள்ள பகுதிகளில் குடியேற்றுவதையோ வசிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. அது பௌத்த தர்மத்துக்கு முரணான செயற்பாடாகும். 

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெளத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் கைவைத்து பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி பெரும் பாவத்தைச் செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US