குருந்தூர் - திரியாயவில் பௌத்தர்கள் அல்லாதோரை குடியேற்ற முடியாது: தேரர் திட்டவட்டம்
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே தமிழ் மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றார்கள் என்று தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
புராதன பௌத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் மக்களை குடியேற்றுவதற்காக அவர்கள் தவறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு இணக்கம் வெளியிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாவத்தை செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், குருந்தூர், திரியாய ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்..
குருந்தூர் மலை மற்றும் திரியாய ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருளியல் திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதை தவிர்த்து அதற்கு உரித்துடைய தமிழ் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் நடத்திய சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்த தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்கவிடத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
