சின்னம் தெரிவில் முரண்பாடு: தீர்மானமின்றி முடிவடைந்த பொதுக்கட்டமைப்பு பேச்சு

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024
By Theepan Sep 27, 2024 01:11 AM GMT
Report

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.


யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் மத்திய குழு உறுப்பினர்களான சிவநாதன் மற்றும் பார்த்திபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் வேந்தன், செயலாளர் துளசி ஆகியோரும், சிவில் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிலாந்தன், யதீந்திரா, வசந்தராஜா, யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு

விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு


சின்னம் தெரிவில் முரண்பாடு: தீர்மானமின்றி முடிவடைந்த பொதுக்கட்டமைப்பு பேச்சு | Tamil Politician Party Meeting 

சின்னம் தெரிவில் முரண்பாடு

இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தைப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சியினர் கோரியுள்ளனர்.

எனினும், ஒரு தரப்பு அரசியல் பிரமுகர்கள் அதனை விரும்பவில்லை. ஒரு தரப்பினர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுவதெனில் தாம் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடமாட்டோம் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்காத தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சின்னம் தெரிவில் முரண்பாடு: தீர்மானமின்றி முடிவடைந்த பொதுக்கட்டமைப்பு பேச்சு | Tamil Politician Party Meeting 

மேலும், சிவில் சமூகங்களின் கூட்டாகக் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச் சபையினர் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையானது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா என்ற முடிவை எடுப்பதற்குச் சில நாட்கள் அவகாசத்தக் கேட்டுள்ளது.

இதையடுத்து நாளை சனிக்கிழமை தமிழ் மக்கள் பொதுச் சபையானது இது தொடர்பில் கூடி தமது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து பணமோசடி

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து பணமோசடி

 

மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்

மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்

 

மேலதிக தகவல் - ராகேஸ், எரிமலை


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US