தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்! அரசிடம் சார்ள்ஸ் கோரிக்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalathan) அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) இது தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 1994இல் கைதுசெய்யப்பட்டவர்கள் கூட இன்னும் சிறையில் உள்ளனர். வழக்கு முடிவதற்கு சிரமமாக உள்ளது. விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதம் அரச தரப்பில் வழங்கப்பட்டது.
ஆனாலும், வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படவில்லை. சாட்சியங்கள் இல்லை. குற்ற ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது.
எனவே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அல்லது புனர்வாழ்வின் பின்னராவது விடுவிப்பதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam