தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை வழங்கும் - அஜித் ரோஹண
வடமாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்குத் தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளுவதற்கு பொலிஸ் தலைமையகம் முழுமையான அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகரும், ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் வடமாகாண பொலிஸ் நிலையத்தின் ஒன்றிணைந்த எற்பாட்டில் செயலமர்வொன்று இன்று யாழ் .தனியார் விடுதி ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
தொழில் வாய்ப்பு அற்ற நிலை இருக்கும் தமிழ் இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவைக்கான ஆளணியினை ஏற்படுத்தும் வகையில் வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி நிலைய சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தார்கள்,இளைஞர்,யுவதிகளைப் பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தார்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கு இந்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே ஊடக பேச்சாளரும் ஆகிய அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை வடமாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு இணைப்பதன் ஊடாக தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகக் காணப்படுகின்றது.
சுதந்திரமான ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தினையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினையும் உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். தமிழ் மொழியில் இணைத்துக்கொள்ளும் போது தமது சொந்த மாவட்டங்களில், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாவட்டங்களிலே கடமை புரியவும் உள்ளனர்.
குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளின் 10 ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக்கொண்டோம்.அதன் பின்னர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 24 ஆயிரம் நபர்களைச் சேவையில் இணைக்க எதிர்பார்க்கயுள்ளோம்.
இதில் வடமாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ வருகின்ற போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்வாறான மொழிப்பிரயோகங்களை தவற விடுகின்றனர்.
எனவே அவ்வாறான எண்ண நிலைப்பாட்டினை தமிழ் இளைஞர்கள்,யுவதிகள் கைகோர்க்கும் போது இதனை மாற்றமுடியும். அதுவே இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கடமையும் ஆகும்.
இதற்கான ஒத்துழைப்பினை வழங்க வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி நிலையம் சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தார்கள், இளைஞர், யுவதிகளைப் பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தார்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்வந்து இதனைக் கிராம சேவையாளர்கள் ரீதியாகச் சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும்.
இதில் தற்போதைய கல்வி நிலைமையில் இடைவிலகிய மாணவர்களின் தொழில் வாய்ப்புகள் அதன் சமூக கட்டமைப்புகளும்,எதிர்காலத்தில் ஏற்படுத்தவேண்டிய சமூக நடவடிக்கை தொடர்பான விடையங்கள் பற்றியும் துறைசார்ந்த உத்தியோகத்தர்களினால் கலந்துரையாடப்பட்டன என தெரிவித்துள்ளார்.
இவ் செயலமர்வில் இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்
எ.டி. பத்திநாயக்க,யாழ் மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர்
எல்.ஏ.சேனாநாயக்க,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எ.இளங்கோவன், உள்ளிட்ட உயர்
அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.






காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
