தமிழர்களை புறக்கணிக்கும் ஐ.நா: சிறீதரன் எம்.பி காட்டம்(Video)
ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் முன்வரைபு தமிழ் மக்களுக்கு இந்த மண்ணிலே நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பிலே அதிக கரிசனை எதனையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், கருத்து தெரிவிக்கையில்,
''முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் தான் ஜனாதிபதியாக வருவதற்காக கத்தோலிக்க மக்களை கொலை செய்து அந்த கொலையின் ஊடாக எவ்வாறு ஜனாதிபதியாக வந்தார் என்பதை வெளிப்படுத்தும் ஒரு ஆவணமாகவும் மிகப்பெரிய இனப்படுகொலையினுடைய அடையாளமாகவும் இந்த சனல் 04 ஆவண படம் வெளியாகி உள்ளது.
இந்த ஆவண படத்தின் ஊடாக பல்வேறுபட்ட உண்மைகள் வெளிவருகின்றன.
எங்களுடைய கருத்தின் படி எவ்வகையான இடர்பாடுகளும் இன்றி இதற்கான தயவு தாட்சனை எதுவும் இன்றி ஒரு நேரடியான நீதியான கௌரவமான நீதி கிடைக்ககூடிய வகையில் ஒரு சர்வதேச விசாரணையாக அது அமைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளினுடைய கோரிக்கையாகும்'' தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...

பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சால் வழங்கப்பட்ட இலட்சக்கணக்கான ரூபா பணம்: அநுரவின் தகவல்





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
