சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்..! கஜேந்திரகுமார் தெரிவிப்பு
வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ் - கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள கட்சிகளின்
மேலும் தெரிவிக்கையில், வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.
தமிழ்த் தேசியப் பேரவையுடன் ஒப்பந்தத்தை ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்ணி செய்து கொண்டுள்ளது. அந்த வகையில் ஏக்கியராட்சியவை எதிர்க்க வேண்டும்
13ஐ பேசி மக்களை திசை திருப்ப வேண்டாம். ஏக்கியராட்சித்துக்கு எதிராக வேலை செய்ய வேண்டும். சுவிஸ் ஆட்சி முறை தொடர்பான் கல்விப் பட்டறை இடம்பெற்றது. இதில் இலங்கையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இங்கு சமஷ்டி தொடர்பான கல்விக் கருத்தரங்கு இடம்பெற்றது. புலம்பெயர் மக்கள் அமைப்புக்கள் தான் கலந்து கொண்டது.
ஐ.நா ஆசிய பசுபிக் பொறுப்பதகாரி இலங்கையின் மனித உரிமை சார்ந்த பொறுப்பதிகாரி மற்றும் சாட்சியங்களை சேகரிக்கும் அதிகாரிகளையும் சந்திக்க முடிந்தது.
இதில் தமிழ் மக்களின் இனப்பிரசினை தொடர்பில் அரசு தமக்குத் தான் மக்கள் வழங்கி இருப்பதாக அரசு தெரிவித்துள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தது.
தமிழ்த் தேசிய தரப்பு
தமிழ் மக்களின் மாற்றம் என்ற வகையில் அதை வலியுறுத்தி வந்துள்ளார்கள். அது உண்மையல்ல பொய். தேசிய மக்கள் சக்திக்கு அவ்வாறான யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுபரபினர்களை வைத்தே அந்த கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுவைத் தாண்டி கட்சியுடன் பேச நாம் முனைந்தோம். தமிழரசு சிவிகே சிவஞானத்தை சந்தித்தபோது அவர் ஏக்கியராஜ்யவை நாம் நிராகரித்துள்ளோம் என்றும் அறிவித்தார்.
இதன் பின்னர் சுமந்திரன் அவசர அவசரமாக செயலாளராக வந்தார். இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார். தமிழ்த் தேசிய தரப்பு ஒன்று கூடி பெரும்பான்மையைக் காட்டி ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காணொளி - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
