இலங்கை மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்: ஐ.நாவிடம் தமிழ் தரப்பு வலியுறுத்தல்
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்து மூல அறிக்கை இலங்கை மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமெனத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் மட்டுப்படுத்துவதை விடுத்து, அதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
