தமிழரசுகட்சி - சங்கு அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு! உறுதிப்படுத்திய சுமந்திரன்

M A Sumanthiran Suresh Premachandran Election
By Rakesh Jan 11, 2026 09:04 PM GMT
Report

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனை அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை இழுத்தடிப்பதற்கான இந்த முயற்சியை உரியவாறு கையாண்டு, இவ்வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன.

மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது குறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட 12 பேரடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுகட்சி - சங்கு அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு! உறுதிப்படுத்திய சுமந்திரன் | Tamil Parties Discuss Provincial Polls

இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது என்பது மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குப் பயந்த அரசு, அதனை உடன் நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சி மாத்திரமேயாகும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

மறுபுறம் கடந்த வியாழக்கிழமை தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றம் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, அரசாங்கம் வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

 முக்கிய சந்திப்பு

இந்தச் சந்திப்பின்போது மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு அரசு மேற்கொண்டுவரும் முயற்சி குறித்தும், அதனை முறியடித்து மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படும் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுகட்சி - சங்கு அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு! உறுதிப்படுத்திய சுமந்திரன் | Tamil Parties Discuss Provincial Polls

அவர் மேலும் கூறுகையில், "மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா அல்லது பழைய முறைமையில் நடத்துவதா என ஆராய்வதற்காகவே அரசு தெரிவுக்குழுவை நியமிக்கின்றது.

அக்குழு புதிய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தீர்மானித்தால், அதன் பின்னர் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கு ஓரிரு வருடங்கள் தேவைப்படும்.

எனவே, இவ்வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் உத்தேசம் அரசுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது. எனவே அடுத்த வாரம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்போது இது பற்றி விரிவாக ஆராய்வோம்." - என்றார்.

3 மாத கால அவகாசம்

அதேவேளை இது பற்றிக் கருத்துரைத்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், "தமிழரசுக் கட்சியுடனான சந்திப்பில் பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படாத போதிலும், விசேட தெரிவுக்குழுவை நியமிக்கும் அரசின் முயற்சி குறித்து நிச்சயமாகப் பேசப்படும்." - என்றார்.

தமிழரசுகட்சி - சங்கு அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு! உறுதிப்படுத்திய சுமந்திரன் | Tamil Parties Discuss Provincial Polls

"மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாமல் இழுத்தடிக்கும் நோக்கிலேயே தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கின்றது என்ற விடயம் தமிழரசுக் கட்சிக்கும் தெரியும். தற்போது 3 மாத கால அவகாசத்துடன் நிறுவப்படும் தெரிவுக்குழுவின் கால அவகாசம் பின்னர் மேலும் நீடிக்கப்படும்.

அரசு உண்மையிலேயே மாகாண சபை முறைமையில் ஈடுபாடு கொண்டிருப்பின், தற்போது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி, பழைய முறைமையில் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

அதன் பின்னர் அடுத்த தேர்தல் வரையான காலப்பகுதியில் எல்லை நிர்ணயம் உள்ளடங்கலாக புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

அதனைவிடுத்து, தேர்தலைக் காலதாமதப்படுத்துவதற்கு இவ்வாறான தெரிவுக்குழுவை நியமிக்கக்கூடாது." என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார்.

அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US