தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்..!
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று(2) காலை 10.00 மணிக்கு யாழ் மருதனார்மடத்தில் நடைபெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் யாழ் மருதனார்மடம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது.
கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு
இந்த கையெழுத்து போராட்டத்தில் பிரதேச வாழ் மக்களின் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இதேவேளை,கிளிநொச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்டபட்ட இயக்கச்சி பகுதியில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்குப்பகுதிகளில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து சேகரிக்கும் செயற்பாட்டுக்கு இயக்கச்சி பிரதேசத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையொப்பங்களை இட்டு வருகின்றனர்.

மேலதிக தகவல் - யது




பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam