தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு தொடர்பாக கைச்சாதிடப்பட்ட உடன்படிக்கை
தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் கட்டமைப்பானது "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும் என கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட குறித்த அறிக்கையில் மேலும்,
"தமிழ்த் தேசியக் கட்சிகள் - தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 9 அம்சங்களாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இனவழிப்பு நடவடிக்கைகள்
ஈழத்தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமக்கென ஒரு மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு - கிழக்கு உள்ளடங்கலாக இலங்கையில் வாழும் தேசிய இனம் என்ற அடிப்படையில், சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள். அடிப்படையிலும் உச்சபட்ச தன்னாட்சியைக் கோருவதற்கான உரித்துடையவர்கள்.
அதனடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் நீண்ட வரலாற்றையும் மிகச் செழிப்பான பண்பாட்டையும் கொண்ட தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை சிதைக்கும் நோக்கத்துடன், நிலப்பரப்பு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், மத ரீதியாகவும் என பல்வேறு வழிகளில் இலங்கையில் இனவழிப்பு நடவடிக்கைகள் அரசினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
