தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் (video)
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா யோன்சன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (07.02.2023) காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அறிமுக கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அறிமுக கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு
இம்முறை இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய 3 உள்ளூராட்சி மன்றங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
