இந்தியாவுக்கு பயணமாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர் கூறியதாகக் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இந்திய உயர்ஸ்தானிகரகம் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாக இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் சில கோரிக்கையை முன்வைத்து வந்தது.
அதில் முக்கியமானதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டதற்கமைய எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழு ஒன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவில் இரா.சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குவதாக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan