கூட்டமைப்பு எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது: கா.அண்ணாமலை (Photos)
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகள் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் அது எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது என வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று காலை 11:30 மணிக்கு நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
”வடக்கு கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணெய் இன்றி இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த கடலை சுற்றி இருக்கின்றவர்களுக்கு எரிபொருள் இது வரைக்கும் கிடைக்கவில்லை. மண்ணெண்ணெய் இறக்குமதி செய்யாமல் பெட்ரோல் இறக்குமதி செய்து ஒரு ரூபா அன்னிய செலாவணியாவது பெற்றுக் கொண்டீர்களா? எரிபொருள் தான் முக்கியம் என்றால் அதில் எது மிக முக்கியம் என்று முதலில் பார்க்க வேண்டும்.
விவசாயம், கடற்றொழிலிற்க்கு மிக முக்கியமானது மண்ணெண்ணெய், எரிபொருள் அமைச்சர் மண்ணெண்ணெய் வருகிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாரே தவிர இதுவரை எதுவும் வரவில்லை” என்றார்.
கடன் வசதிகள் இடை நிறுத்தம்! மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை - வழங்கப்பட்டுள்ள அனுமதி |