ஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்தவுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சந்திப்பு நாளைய தினம் பிற்பகல் நான்கு மணிக்கு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாகவே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
