தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்! யாழில் ஆரம்பமாகியுள்ள ஆர்ப்பாட்ட பேரணி
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவிலிருந்து தற்போது ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது நாவலர் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட காரியாலயத்தை அடையவுள்ளதுடன், அங்கு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், “தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்”, “சர்வதேச நீதி வேண்டும்”, “தமிழர் நிலங்களை சுரண்டாதே”, “தமிழர் வழிபாட்டு தலங்களை பௌத்த விகாரையாக்காதே” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://fb.watch/3_elpukKjc/



