தமிழகத்தின் நகர்புற, மாநகராட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் பாரிய வெற்றி!(photos)
தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளையும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியே கைப்பற்றும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திராவிட முன்னேற்ற கழக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், பாரதீய ஜனதாக்கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் நாம் தமிழர் உட்பட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன.
தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரையிலான முடிவுகளின்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திராவிட முன்னேற்றக்கழக முன்னணி 21 இடங்களில் முன்னிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் திராவிட முன்னேற்றக்கழக முன்னணி 121 இடங்களிலும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 05 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் திராவிட முன்னேற்றக்கழகம் 323 இடங்களிலும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.



