நடிகர் ரஜினியின் முடிவால் தப்பியது தமிழகம்! - மனோ கணேசன் வெளியிட்ட பதிவு
"நடிகர் ரஜினி நேரடி அரசியலை கைவிட்ட நிகழ்வு, தமிழகம் தப்பிப்பிழைத்த, மிக நல்ல ஒரு சம்பவம்" என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது அரசியற்பிரவேசம் தொடர்பில் அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் அதனை வாபஸ் பெறுவதாக கூறியிருந்தார்.
அது தொடர்பில் மனோ கணேசன் தனது கருத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாடு, பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய ஒரு மாநிலம். வட இந்தியாவில், டெல்லி, மும்பாய், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் ஆகிய மாநகரங்களை சுற்றிய பகுதிகளில் மட்டுமே முன்னேற்றம் தெரியும்.
வட இந்தியாவில், உள்ளூரில், கிராமிய நாட்டு புறங்களில், பின்னேற்றம் கண்கூடாக தெரியும்.
தமிழ்நாட்டின் இந்த ஒப்பீட்டளவிலான முன்னேறிய நிலைமைக்கு காரணம் இம்மாநிலத்தையும், புதுச்சேரியையும் தேசிய கட்சிகள் அல்லாமல், திராவிட கட்சிகள் பல பத்தாண்டுகளாக ஆண்டு வருவதே காரணம்.
திராவிட இயக்க அணியின் மூலக்கொள்கை சமூக நீதி என்பதாகும். இது நீதிக் கட்சியிலிருந்து ஆரம்பமாகி பெரியார், அண்ணா ஆகிய பெருந்தலைவர்களால் செதுக்கப்பட்டதாகும். இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிநாதமாக விளங்குகிறது.
இந்த உண்மையை ஆய்வுரீதியாக ஆராய்ந்து பார்த்தால்தான் விளங்கும். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் அரசியல்வாதிகளின் அலங்கோலங்கள் உண்மை. ஆனால், இந்த அலங்கோலங்களுக்கு அப்பால் இன்னொரு உண்மையும் இருக்கின்றது.
வட இந்திய கட்சிகளின், அரசியலர்களின் 'படா' அலங்கோலங்கள் பற்றி தெரியாதவர்களும், வட இந்திய மாநிலங்களை நேரடியாக கண்டிராதவர்களும்தான் திராவிடக் கட்சிகளைக் குறை கூறுவார்கள்.
திராவிட கட்சிகளில் தவறு, பிழை, குற்றம் கணிசமாக இருக்கின்றன. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், வட இந்திய மாநிலங்களை ஆளும் கட்சிகளின் கட்சிகளுடன் ஒப்பிடும்போது இவை மேல். இதுதான் உண்மை.
கல்வி, சுகாதாரம், ஜாதீயம் - பெண்ணடிமை ஒழிப்பு, பின்தங்கியோருக்கான கல்வி, அறிவியல், ஆங்கில மொழியறிவு, தொழில், அரசியல் துறை ஒதுக்கீடுகள், கைத்தொழில், வர்த்தகம், கலை, விளையாட்டு, போக்குவரத்து, தகவல் தொடர்பு என்ற பல்வேறு துறைகளில் தமிழகம் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக இருக்கின்றது.
திராவிட கட்சிகளின் தவறுகள் இன்னமும் திருத்தப்பட்டு அவற்றுக்கு உள்ளேயே இருந்து உருவாகும் புதிய அமைப்புகள்தான் தமிழகத்தை இன்னமும் சிறந்த இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியுமே தவிர, திராவிட கட்சிகளுக்கு மாற்று தேசிய கட்சிகள் அல்ல.
இந்தப் பின்னணியில் பார்த்தால் குறுக்கு வழியில் தேசிய கட்சிகளை ஆன்மீகம் என்ற பெயர் சூட்டி குறுக்கு வழியில் சிம்மாசனத்தில் உட்கார வைக்க முயன்ற நடிகர் ரஜினிகாந்த் நேரடி அரசியலை கைவிட்டமை, தமிழகத்தில் இன்று நிகழ்ந்த மிக நல்ல ஒரு சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 30 நிமிடங்கள் முன்

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam
