இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரும் தமிழ்நாடு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும், விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
தூதரக வழிவகைகள்
அண்மையில் இலங்கைப் படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது கடிதத்தில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அவர்களை விடுவிக்க மையத்தின் தலையீட்டைக் கோரியுள்ள அவர், அதற்காக தூதரக வழிவகைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை நேற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan