தமிழ் - முஸ்லிம் கட்சிகள் கிழக்கில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை!
இந்த முறை மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் போது தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் நின்று தமது பலத்தை இம் முறை நிலை நிறுத்த வேண்டும் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
தனது ஊடக அறிக்கையில் இன்று புதன்கிழமை (16) அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்கட்சிகள்
ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கிழக்கு மாகாண சபையை இந்த முறை தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்பதுடன் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்கட்சிகள் முன் வர வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்திகளை வேலை வாய்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை எனவும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
