காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தப்பட்டோர் புதைகுழிக்குள் உள்ளார்கள் - கஜேந்திரன் அதிர்ச்சி தகவல்!

Missing Persons Sri Lankan Tamils Selvarajah Kajendren chemmani mass graves jaffna
By Kajinthan Jul 26, 2025 11:24 AM GMT
Report

2009இல் அதன் உச்சக்கட்ட செயற்பாடாக சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப்படையினராலே மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், "உணவுத்தடை மற்றும் மருந்து தடை என்பவற்றையும் ஆயுதமாக பயன்படுத்தி அந்த இன அழிப்பு அரங்கேற்றப்பட்டது.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 1980ஆம் ஆண்டுகளின் பிற்பாடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல இளைஞர்களும் யுதிகளும் இலங்கை இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவ குழுக்களினாலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இலங்கை இராணுவம் 

குறிப்பாக 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பிற்பாடு சந்திரிக்க அரசாங்கத்தினால் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணம் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் 96ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தப்பட்டோர் புதைகுழிக்குள் உள்ளார்கள் - கஜேந்திரன் அதிர்ச்சி தகவல்! | Tamil Missing Persons Mass Graves In Tamil Areas

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் எல்லோரும் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இப்போது செம்மணியில் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் வெளி வந்திருக்கின்றன.

இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டவர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இந்த இனப்படுகொலைக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் உள்ளகப் பொறிமுறை மூலம் எந்த விதமான நீதியும் கிடைக்காது என்பது தமிழ் மக்களுடைய உறுதியான நிலைப்பாடு.

எனவே எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது தொடர்பான தீர்மானமானது ஐநாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்த பொறுப்பு கூறல் தொடர்பாக 2012ஆம் ஆண்டில் இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் அந்த தீர்மானங்களானது முற்றும் முழுதாக உலக விசாரணையை வலியுறுத்துகின்ற தீர்மானமாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் காரணமாக இந்த 15 வருடங்களில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

ஐநாவின் நடவடிக்கை 

யுத்தம் நடைபெறுகின்ற போது இந்த இலங்கை அரசிற்கு முழுமையாக துணை நின்ற ஐநா, யுத்தம் நிறைவடைந்த பின்னர் அந்த இனவழிப்பை மேற்கொண்டவர்களிடமே பொறுப்பு கூறல் விவகாரத்தை ஒப்படைத்துக் கொண்டு வருவது என்பது ஏமாற்றுகரமான விடயம்.

காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தப்பட்டோர் புதைகுழிக்குள் உள்ளார்கள் - கஜேந்திரன் அதிர்ச்சி தகவல்! | Tamil Missing Persons Mass Graves In Tamil Areas

பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து சிலர் அந்த உலக விசாரணையை ஏற்றுக்கொண்டு வந்ததால் எமக்கு இன்று வரை நீதி கிடைக்காமல் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை பெறுவதற்கும் இந்த உள்ளக பொறிமுறை மூலம் தீர்வு பெறுவதற்கு ஒத்துக்கொண்டமையால் இன்று வரைக்கும் அவர்களுக்கான நீதியானது கிடைக்காமல் காணப்படுகின்றது.

ஆகவே, இந்த உலக பொறிமுறை நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த செம்மணி விவகாரத்தில் கூட மீண்டும் ஜனாதிபதியையே அதை விசாரிக்குமாறு கோரி உள்ளக விசாரணைகளுக்கு வாய்ப்பு கொடுக்கின்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தவறு இனிமேல் நடக்கக்கூடாது.

எங்களைப் பொறுத்தவரை பக்கச்சார்பற்ற ஒரு முழுமையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது தொடர்பான ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் எடுக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவர், ஆணையாளர் போன்றவர்கள் இந்த பொறுப்பு கூறல் விவகாரமானது 15 ஆண்டுகள் தோல்வி அடைந்திருக்கின்றது என்ற விடயத்தை ஐ.நா செயலாளருக்கு தெரியப்படுத்தி, அவரிடம் இந்த விடயத்தை பாரப்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் போராட்டத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்.” என குறிப்பிட்டுள்ளார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US