மட்டக்களப்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (VIDEO)

Batticaloa Mullivaikal Remembrance Day Sri Lanka
By Siva thileep May 18, 2022 12:43 PM GMT
Siva thileep

Siva thileep

in சமூகம்
Report

மட்டக்களப்பில் மே 18 தமிழினப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு இடம்பெற்றுள்ளது.

இன்று(18) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் (VIDEO) | Tamil Massacre Batticaloa By Mullivaikkal In Batt

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் படுகொடுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முகமாக பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.


குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சமய தலைவர்கள், கிழக்கைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட கிராமிய மட்ட மக்கள், கிராம மட்ட சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பெருந்திரலானோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் (VIDEO) | Tamil Massacre Batticaloa By Mullivaikkal In Batt

இதனைத்தொடர்ந்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்ததுடன் அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.  

தமிழினப் படுகொலை நினைவேந்தல் தின அறிக்கை மே 18

மட்டக்களப்பில் இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் (VIDEO) | Tamil Massacre Batticaloa By Mullivaikkal In Batt

மே 18, 2022 ஆகிய இன்றைய நாளில், இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சார்ந்த போரினால் பாதிக்கப்பட்ட கிராமிய மட்ட மக்கள், கிராம மட்ட சிவில் அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆன நாங்கள் அனைவரும் போரினால் கொல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்வதற்காக இங்குக் கூடியிருக்கின்றோம்.

இந்த நாட்டின் சிறுபான்மை இனமான வடக்கு, கிழக்கு வாழ் தழிழர்களான எங்கள் மீது அரசினால் ஏவப்பட்ட குரூர யுத்தத்தை மூன்று தசாப்தங்களாக அனுபவித்தோம். 2009 ஆம் ஆண்டில், போரின் இறுதிக் கட்டத்தில் தொடர்ச்சியான செல் வீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல்களின் காரணமாக பச்சிளம் பாலகர்கள், கற்பினித் தாய்மார், முதியவர்கள் அடங்கலாக பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். சிவிலியன் இடங்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் (VIDEO) | Tamil Massacre Batticaloa By Mullivaikkal In Batt

முல்லைத்தீவு மாவட்டத்தில், தாக்குதல் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்ட வலயத்துக்குள் இருந்த மக்கள் மீது இலங்கை அரசு இரசாயன குண்டுகளையும் கனரக ஆயுதங்களையும் பிரயோகித்தது. ஆதாரங்களுக்கு அமைய, இறுதி யுத்தத்தின் போது 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக் கணக்காணோர் படுகாயமடைந்தனர், உடல் உறுப்புக்களை இழந்தனர், உருச்சிதைவுக்கு உள்ளாகினர், பலர் இன்னும் உடல்களில் செல் துண்டுகளுடனும், சன்னங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

உணவும் மருத்துவ வழங்கலும் தடைபட்டதால், பசியும் பட்டினியும் வியாபித்திருந்தது. மக்களுக்கு உப்பில்லாக் கஞ்சிதான் வழங்கப்பட்டது. கஞ்சி வாங்க கஞ்சி வழங்கும் இடத்துக்கு சென்ற பிள்ளைகள் செல் தாக்குதலுக்கு உள்ளாகினர். உணவுப் பொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பெண்கள், கற்பினிப் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது கொல்லப்பட்ட தமது உறவுகளின் உடலங்களை அப்படியே விட்டுச் செல்ல நேர்ந்தது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் (VIDEO) | Tamil Massacre Batticaloa By Mullivaikkal In Batt

போரின் இறுதியில், ஆயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டனர். தமது பிள்ளைகளை திருப்பி அனுப்புவார்கள் எனும் நம்பிக்கையில் மக்கள் தமது பிள்ளைகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.

எனினும் சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட பலர் இன்னும் திரும்பி வராததுடன் அவர்கள் எங்குள்ளார்கள் என்பதும் தெரியாது,தமிழ் சமூகம் இன்னும் கூட்டு உளவடுவால் துன்புற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் சமூகம் கூட்டாக அனுபவித்த துன்பங்களும், இறுதி யுத்தத்தில் 40,000 இற்கும் மேற்பட்ட தழிழர்கள் கொல்லப்பட்டதும் ஒரு இனப்படுகொலையாக இன்னும் சர்வதேச சமூகத்தாலோ பின்னர் வந்த இலங்கை அரசாங்கங்களாலோ ஏற்று அங்கீகரிக்கப்படவில்லை.


எனவே, தழினப் படுகொலை நடைபெற்றதை ஏற்று அங்கீகரிக்குமாறு நாம் சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசையும் கோருகிறோம். மேலும், நாம் பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறோம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு வழங்க வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும், போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறல் வேண்டும், அனைத்து தழிழ் அரசியல் கைதிகளையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடன் விடுவிக்க வேண்டும், வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கலை முடிவுறுத்தல். அனைத்து வகையான காணி அபகரிப்புகளையும் உடன் நிறுத்த வேண்டும், சிறுபான்மை மக்களின் மத, கலாச்சார தலங்களை ஆக்கிரமிப்பதை உடன் நிறுத்த வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், சமூகமட்ட அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள். 

இதேவேளை, பொலிஸாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு,வெல்லாவெளி பகுதியில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை வார நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ. ரஜனி ,உபதவிசாளர் நா.தருமலிங்கம் மற்றும் உறுப்பினர்களின் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றன.


GalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US