கோமாளித்தனமான அரசியலின் பின்னால் மக்கள் செல்லமாட்டார்கள்: பிரசாந்தன் (Photos)
அரசியல் நோக்கத்திற்காக தம் சமூகத்தையே அழிக்க முற்படும் கோமாளித்தனமான அரசியல்
கருத்தியலின் பின்னால் மக்கள் செல்லத் தயாராக இல்லை என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வீதி அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான கூட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்கிழமை(19.09.2023) நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமூகப் பொறுப்பு
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
பல்வேறு தேவைகளுடன் நாளாந்தம் போராடும் மக்கள் புகலிடக் கோரிக்கை புனைகதைகளை புரியாமலில்லை எனவும் பிள்ளையானை எப்போது கைது செய்வார்கள், பிள்ளையான் பதவி விலக வேண்டும், போன்ற கோமாளித்தனமான அரசியல் கருத்துக்களை குறிப்பிடும் பொது அமைப்புக்கள் என தம்மை அடையாளப்படுத்துபவர்களும் சமூகப் பொறுப்புணர்ந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் காணப்படும் வீதி அபிவிருத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அன்று அமைச்சர்களிடம் சென்று காத்திருந்து 05 அல்லது 10 வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற்று வந்த துர்ப்பாக்கிய நிலை மாறி இன்று மிகத் துரிதமாக மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் உள்ளது.
போக்குவரத்து தடை
விவசாயிகள், மீனவர்கள், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான எந்த வீதிகளும் மணல் வீதிகளாக போக்குவரத்திற்கு தடையாக அமையக்கூடாது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மிக உறுதியாக உள்ளார்.
முடிந்தவரை மக்களின் தேவையுணர்ந்து வீதிகளை அமைப்பதிலும், புனரமைப்பதிலும் அதிக நாட்டம் காட்டுகின்றோம். மக்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். சமூக மட்ட அமைப்புக்கள் கிராம, பிரதேச அபிவிருத்தியில் அதிக அக்கறை காட்டவேண்டும். வீதிகளை தெரிவு செய்யும் போது பொது நோக்கோடு முன்மொழிவுகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.
வீதிச் சமிஞ்சை மின்விளக்கு
ஆரையம்பதி பிரதான வீதியில் கடந்த ஒரு வருடங்களுக்குள் நடந்த வீதி விபத்தில் சுமார் 06 பேருக்கு மேல் மரணமானதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அதிக கவனம் செலுத்தியுள்ளார். வீதிச் சமிஞ்சை மின்விளக்குகள் பொருத்துவது தொடர்பான சாத்தியமான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
பிரதேச சபை, பிரதேச செயலாளர் இணைந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் வீதியினை முறையற்ற வகையில் கடப்பதை தடுப்பதற்கான தடுப்பு வேலி அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.
கட்டுப்படுத்தல் நடவடிக்கை
போதைப் பொருள் பாவனை சட்டவிரோத மதுபாவனை என்பவற்றில் பெற்றோரும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பொது அமைப்புக்களின் ஆதரவுடன் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் நமச்சிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் மனோரஞ்சிதம் ஜெயச்சந்திரன், வீதி அபிவிருத்தி பொறியியலாளர் மா.குமரேஸ்வரன், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)