உழைக்கும் தொழிலாளர் நலன்களுக்காக குரல் கொடுங்கள்..! காதர் மஸ்தான் எம்.பி கோரிக்கை

May Day Sri Lanka Sri Lankan Peoples
By Thileepan Apr 30, 2026 10:02 PM GMT
Report

உழைக்கும் தொழிலாளர் நலன்களுக்காக குரல் கொடுப்போம் என மே தின வாழ்த்துச் செய்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி மே தினம் தொடர்பில் நேற்று (30.04) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக தொழிலாளர் தினமாக மே 1 பெரும்பாலான நாடுகளில் விடுமுறையோடு கொண்டாடப்டுகின்றது.

அத்துடன் தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுத்த தினமாகவும் நினைவு கூரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில் தொழிலாளர்கள் இன்றும் சிறந்த வாழ்க்கைத் தரமட்டத்தை அடையவில்லை என்றே கூறவேண்டும்.

இலங்கையின் சுதந்திரத்தின் போதே இலங்கை பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய தோட்ட தோழிலாளர்கள் வஞ்சிக்கப்பட தொடங்கி விட்டார்கள்.

காலம்காலமாக தமது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாடற்றவராக்கப்பட்டனர். இந்த கொடுமையை கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர் தந்தை செல்வா தான் அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

பிரித்தானியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. பயங்கர கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு

பிரித்தானியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. பயங்கர கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு

இலங்கை பொருளாதாரம் 

தொடர்ந்தும் அந்த நாடற்ற தொழிலாழர்களின் நன்மைக்காக உழைத்தார். அவரால் உருவாக்கப்பட்ட தவி கூட்டணியும் இலங்கை பொருளாதாரத்தை வளர்த்த மலையக உறவுகளை தொடர்ந்தும் நினைவுகொள்ளும்.

உழைக்கும் தொழிலாளர் நலன்களுக்காக குரல் கொடுங்கள்..! காதர் மஸ்தான் எம்.பி கோரிக்கை | Tamil Liberation Alliance Speak Out Working People

இலங்கையில் தோட்ட தொழிலாளர் மட்டுமல்ல விவசாயம், மீன்பிடி, குடிசை கைத்தொழில் ஏன் அரச தனியார் துறைத்தொழிலாளர்களும் போதிய வருமானமின்றி துன்பப்படுகின்றனர்.

விசேடமாக அரதுறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இடமாற்றம் பதவி உயர்வு மேலதிக நேரம்வழங்குதல் போண்றவற்றால் உயர் அதிகாரிகளால் வஞ்சிக்கப்படுகின்றனர். அத்துடன் இந்த தேசத்திற்காக உழைத்த சிரேஸ்ட பிரஜைகள் கூட தமது மிஞ்சிய காலத்தை கொண்டுசெல்ல அவதிப்படுகின்றனர்.

சுதந்திரத்தை தொடர்ந்து இனவாதம் சிறுபாண்மைக் கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதாலும் உழல் லஞ்சம் என்பன தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் வளர்ககப்பட்டதாலும் இலங்கை பொருளாதாரம் வீழ்சியடைந்தது இதனால் நீண்டகாலமாக இலங்கை பெண் தொழிலாழர்கள் மத்தியகிழக்கு ற்கு சென்று மிக கடினமாகவும் சிலர் அடிமை தொழிலாளர்களாகவும் வேலை செய்கின்றனர்.

இலங்கையில் மலையக தோட்ட தொழிலாளர் மத்தியிலும் மத்திய கிழக்கு தொழிலாளர் மத்தியிலும் விரைவாக விடுதலை கிடைக்கவேண்டுமென இந்த நாளில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேண்டி நிற்பதுடன் அனைத்து தொழிலாளர் வாழ்விலும் சுபீட்சம் உண்டாகட்டுமென இந்த மேதின வாழ்த்தினை தெரிவிக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மகளுக்கு சித்திரவதை கொடுத்த 24 வயது தந்தை கைது

மட்டக்களப்பில் மகளுக்கு சித்திரவதை கொடுத்த 24 வயது தந்தை கைது

இதேவேளை,  உலகெங்கும் பரந்து செறிந்து வாழும் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் துயரம் நீங்கி அவர்களின் வாழ்வு வளம் பெற்று உயர்வுடன் வாழ வேண்டும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மே தினத்தை கொண்டாடும் உலக தொழிலாளிகள் வர்க்கம் தமது உழைப்புக்கேற்ப ஊதியத்தையும் ஓய்வையும் ஏனைய நலன்களையும் பெறுவதற்கு முதலாளித்துவமும் உலக அரசுகளும் முன்வரவேண்டும்.

இரத்தம் சிந்தும் தொழிலாளர்களுக்கான தினம்

உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வு உயரும் பொழுது அந்த தேசம் அபிவிருத்தியில் தன்னிறைவு காண்கிறது. உலகப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் தொழிலாளர் வர்க்கத்தை பெருமைப்படுத்தும் நோக்குடன் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் இந்த மே தினத்தைப் பெருமைப்படுத்துவதே எம் அனைவரினதும் உயரிய நோக்கமாகும்.

உடலை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளர் வர்க்கமானது என்றுமே போற்றப்படக் கூடியவர்களே. அவர்கள் சிந்துகின்ற ஒவ்வொரு வியர்வைச் சொட்டுக்களின் மொத்த உருவமே நாட்டின் பொருளாதார முன்னேற்றமாகும்.

எனவே தொழிலாளர்களை போற்றி அவர்களின் ஒவ்வொரு வியர்வை துளிக்கும் மதிப்பளித்தே ஆக வேண்டும்.

அந்த வகையில் மே தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US