குருந்தூர்மலையில் மீண்டும் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு
முல்லைத்தீவு - குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து "தொல்லியல் தளம்" என்கின்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முற்பட்ட விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறான சூழலில் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நேற்று தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது.
தொல்லியல் நிலம்
ரணில் ஆட்சியில் இருந்தபோது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் வரையில் 341 ஏக்கர் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள்.
இந்த விடயம் உடனடியாக ரணில் விக்ரமசிங்க வரை கொண்டு செல்லப்பட்டதனால் ரணில் தலையீடு செய்த காரணத்தால் விவசாய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்படவில்லை.
தற்போது அநுர அரசு ஆட்சியில் குருந்தூர்மலை மற்றும் அதனைச் சூழவுள்ள 341 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்கும் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்து முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
