நீதிபதிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அழுத்தம்: தமிழர் தரப்பில் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்(Video)
நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை எதிர்காலத்தின் மேல் ஒரு அச்ச நிலைமையை ஏற்படுத்துகிறது என ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(29.09.2023) நடத்திய ஊடக சந்திப்பதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் ஒத்திசைவாகத்தான் இதுவரைக்காலமும் இருந்துள்ளது.
இப்பொழுதும் நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியது என்பது நிச்சயமாக நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்தின் மேல் ஒரு நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகின்றது, அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த நாட்டின் மேல் எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விகளை எழுப்பக்கூடுகிறது.
அவ்வாறான சூழ்நிலையில் இந்த மண்ணில் வாழ முடியுமா என்ற கேள்விகள் நிச்சயமாக எம் மக்கள் மத்தியில் காணப்படும். என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள முழுமையான கருத்துக்கள் பின்வரும் காணொளியில் பதிவாகியுள்ளது.





ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
