பிரான்ஸ் சென்ற இலங்கை தமிழ் குடும்பத்தின் பரிதாப நிலை
இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் சென்ற தமிழ் குடும்பத்தின் போராட்ட நிலை குறித்து பிரான்ஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரிய சசி - அருணா தம்பதி பற்றி பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சசி - அருணா குடும்பத்தினர் பிரான்ஸின் கிழக்கு நகரான ரியூனியனுக்கு (Réunion) படகு மூலம் சென்றடைந்தனர். எனினும் அவர்களின் ஒருவருக்கு மாத்திரம் நீண்ட போராட்டத்தின் பின்னர் அகதி அந்தஸ்த்து கிடைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் குடும்பத்தின் கடைசி மகள் அகதி அந்தஸ்தைப் பெற்றுள்ளார். குறித்த மகள் உயர்நிலை கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்.
மகன் கைவினைத் தொழிலில் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். இந்த குடும்பத்தின் தலைவரான சசி டெக்ஸி சாரதியாக செயற்பட்டுள்ளார். தற்போது சசி பிரெஞ்சு மொழியை தீவிரமாக கற்று வருகின்றார். மனைவி அருணா வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து வருகின்றார்.
சென்சிலுவை சங்கத்தினர் மற்றும் பிரான்ஸ் மக்கள் இந்த குடும்பத்தினருக்கு பல்வேறு நெருக்கடியின் போது உதவி வருவதாகவும், பலர் தங்களை ஊக்கப்படுத்தியுள்ளதாகவும் சசி குறிப்பிட்டுள்ளார்.
தொழில் ரீதியாகவும், அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு சட்டரீதியான உதவிகள் பெறுவதற்கும் பிரான்ஸ் மக்கள் இந்த குடும்பத்தினருக்கு உதவியுள்ளனர்.
சசி இலங்கையில் வர்த்தக நிர்வாகியாக செயற்பட்டு வந்துள்ளார். எனினும் 2018ஆம் ஆண்டு, அவர் தனது மற்றும் குடும்பத்தின் உயிருக்கு பயந்து தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டு சசி - அருணா குடும்பத்தினர் உட்பட 50 இலங்கை புகலிட கோரிக்கையாளர் ரீயூனியன் தீவிற்கு வருகைத்தந்துள்ளனர். ஒரு சிறந்த வாழ்க்கை நிலையை எதிர்பார்த்து குறித்த இலங்கையர்கள் வருகைத்தந்துள்ளனர். எனினும் அவர்களில் பலர் நீண்ட காலம் அகதி அந்தஸ்த்து பெற போராட வேண்டியுள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.
சசி - அருணா குடும்பத்தினர் 12 முறை தங்கள் தங்கியிருந்த வீடுகளை மாற்றியுள்ளனர். அகதி அந்தஸ்த்து பெற்ற குடும்பத்தை நிலையாக நடத்தி செல்வது இன்னமும் சிக்கலாகவே உள்ளதென இந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் இந்த குடும்பத்தினர் தொடர்ந்து தங்குவதற்கான ஒப்பந்தத்தை வெளியிடும் அமைப்பான ஒப்ராவிடமிருந்து அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் அனைத்து புகலிட விண்ணப்பங்களிலும், 10 சதவீதமான விண்ணப்பங்கள் மாத்திரமே சாதகமான பதிலை பெற்றுள்ளன. 2018ஆம் ஆண்டில் இருந்து 30 பேர் மாத்திரமே புகலிடம் பெற்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
