தமிழ் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பிரச்சினைக்கு இலங்கை நீதி வேண்டும்! யாரிடம் நோவோம்..!

United Nations Tamils Mullivaikal Remembrance Day ITAK
By Ariyam Feb 27, 2024 12:32 PM GMT
Report

தமிழ் இனத்துக்கான இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையைடன் கூடிய சமஷ்டி அடிப்படையில் சுதந்திரமாக வாழ்வதற்காக ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டும் செயல்பாடுகளை முன் எடுக்கவே 1949, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை ஆரம்பித்தார்.

தந்தை செல்வாவின் தூரநோக்கு சிந்தனையானது இன்று 75, வருடங்களாக அவரால் முன் எடுத்த அகிம்சைப் போராட்டங்கள் அவரால் நிறைவேற்றிய வட்டுக்கோட்டை தீர்மானம் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வழிப்படுத்திய ஆயுதப்போராட்டங்கள் வரை தமிழினத்தின் இன விடுதலைக்கான போராட்டங்களாக நடைபெற்று எண்ணற்ற தியாகங்களையும் ஆயிரக்கணக்கான மாவீரர்களையும் ஈழமண்ணின் விடுதலைக்காக ஆகுதியாக்கி சுதந்திர விடுதலைக்கான இலக்கை நோக்கியே முன்னகர்தப்பட்டது.முன்னகர்த்தப்படுகிறது.

தற்போது அதில் இருந்து கற்றுக்கொண்ட அல்லது பெறப்பட்ட வெற்றிகள் தற்போது இராஜதந்திர செயல்பாடுகளாக மாறி சர்வதேசத்தை நோக்கி தமிழினப் பிரச்சனைக்கான தீர்வை கேட்டு தமிழர்களின் போராட்டம் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளும், வடகிழக்கில் வாழும் தமிழினமும் தமது உரிமைக்கான குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

அரசியல் கட்சிகள்

முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் இனப்படுகொலைக்கான நீதி. தமிழினத்தின் அரசியல் தீர்வுக்கான நீதி இலங்கை அரசால் கிடையாது என்பதை பல தடவை தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகவே கூறியும் வந்தனர்.

தமிழ் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பிரச்சினைக்கு இலங்கை நீதி வேண்டும்! யாரிடம் நோவோம்..! | Tamil Ethnic Problem Needs International Justice

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் பிரதான கட்சியாக இருந்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி, சர்வதேச விசாரணை தான் வேண்டும் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தொடக்கம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல உலகத்தலைவர்கள் பாரதப்பிரதமர் ஐ.நா மனித உரிமை ஆணையகம், சர்வதேச இராஜதந்திரிகள் என பலதரப்பட்டவர்களுடன் 2009, மே,18, க்கு பின்னர் மிக கரிசனையுடன் வெளிப்படுத்தி வந்ததை, வருவதை காணலாம். 

அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பொது அமைப்புகள் மனித உரிமை செயல்பாட்டார்கள் அனைவருமே ஒரு குரலால் சர்வதேச நீதியையே கேட்டு அழுத்தம் கொடுக்கின்றனர்.

ஏன் கடந்த 2021, பெப்ரவரி,03, ல் கிழக்கிலங்கையின் தெற்கு முனையில் உள்ள பொத்துவில் நகரில் தொடங்கி 2021 பெப்ரவரி 07,வரை வட மாகாணத்தின் வடமுனையில் பொலிகண்டியில். வரை நடைபெற்ற பேரணியிலும் தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்றுதான் கோஷம் போட்டனர்.

சர்வதேசத்திடம் நீதிகோரி போராடும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் இப்போது இலங்கை நீதிமன்றில் நீதிகேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளமை எந்தவகையில் பொருந்தும்? யாரை பேய்க்காட்டுகிறார்கள்?

அரசியல் யாப்பு

இலங்கை அரசினால் கடந்த 1956, தொடக்கம் இன்று வரை இடம்பெற்ற இனப்படுகொலைகளாக இருக்கலாம், நில அபகரிப்புக்களாக இருக்கலாம், திட்டமிட்ட குடியேற்றங்களாக இருக்கலாம் பல தரப்பட்ட வழக்குகள், ஏன் வடகிழக்கை பிரிக்க 2006,ல் ஜே வி பி கட்சியால் தாக்கல் செய்த வழக்காக இருக்கலாம் எதுவுமே தமிழ் இனத்திற்கான உண்மை நீதி நியாயம் இல்லாமல் தட்டிக்கழித்த வரலாறுகளே அதிகம். 

இலங்கையின் அரசியல் யாப்பு நீதிமன்றம் 1972 முதல் 1978 வரை இலங்கைக் குடியரசில் நடைமுறையில் இருந்த ஒரு அரசியல் யாப்பு நீதிமன்றம் ஆகும்.

தமிழ் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பிரச்சினைக்கு இலங்கை நீதி வேண்டும்! யாரிடம் நோவோம்..! | Tamil Ethnic Problem Needs International Justice

இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டு) ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்குப் பதிலாக புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி, 1972 மே 22ம் திகதி பிரகடனப்படுத்தியது.

இந்த அரசியலமைப்பு முதலாம் குடியரசு அரசியலமைப்பு எனப்படுகின்றது. இதில் காணப்பட்ட ஒரு அம்சமே அரசியல் யாப்பு நீதிமன்றமாகும். 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978 செப்டம்பர் 7 ஆம் நாள் முதல் தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.

இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 வரை இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல்

1977 ஜீலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 அக்டோபர் 4 இல் கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (ஜனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1978 பெப்ரவரி 4 இல் அரசுத்தலைவரானார். 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் ஆணை கேட்டிருந்தது.

இதன் படி, ஐ.தே.க ஆட்சி அமைத்ததும் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 1978 செப்டம்பர் 7 இல் அறிவிக்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்ற ஓரவை முறைமையையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் பதவியையும் அங்கீகரித்தது.

தமிழ் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பிரச்சினைக்கு இலங்கை நீதி வேண்டும்! யாரிடம் நோவோம்..! | Tamil Ethnic Problem Needs International Justice

அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் பல்லுறுப்பினர் கொண்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் படி, நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த எண்ணிக்கை 14ஆவது திருத்தச் சட்டத்தில் 225 ஆக அதிகரித்தது. 

இந்த அரசியலைப்பு ஊடாகவே இலங்கையில் நீதிமன்றங்களும் இயங்குகிறது.

இனப்பிரச்சனை

நீதிமன்று சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும் உரிமையியல், குற்றவியல் அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட, பெரும்பாலும், ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும்.

 மரபுச்சட்டம் மற்றும் உரிமையியல் சட்டங்களில் நீதிமன்றங்கள் தகராறுகளை தீர்ப்பதில் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குடிமக்களும் தமது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை அணுக இயலும் எனப் பொதுவாக அறியப்படுகிறது.

குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் தங்களது எதிர்வாதத்தை எடுத்துரைக்க உரிமை உண்டு. இலங்கை அரசியல் யாப்புகளை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியானது தந்தை செல்வா காலம் தொடக்கம் சம்பந்தர் காலம் வரை அதனை ஏற்கவில்லை.

தமிழ் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பிரச்சினைக்கு இலங்கை நீதி வேண்டும்! யாரிடம் நோவோம்..! | Tamil Ethnic Problem Needs International Justice

தமிழ்த்தலைவர்களின் ஒப்புதல் இன்றி் நிறைவேறிய அரசியல் யாப்பு திருத்தம் என்பதே உண்மை. இதனை மாற்றம் செய்யவேண்டும்.

புதிய அரசியல யாப்பு மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று தான் கடந்த 2015,இல் நல்லாட்சி அரசியல் தமிழ்த்தேசியகூட்டமைப்பு இணக்கப்பாடாக மைத்திரி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கி ஏமாந்தது என்பது எல்லோரும் அறிந்த வெட்டை வெளிச்சமான உண்மை.

இனவாத அரசின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தமிழரசுக்கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழின விடுதலைக்காக ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி 74, வருடங்களாக இலங்கை நீதிமன்றில் தமது கட்சிக்கு எந்த சந்தர்பத்திலும் நீதிகேட்டு செல்லவில்லை.

அந்த கட்சியில் உள்ள எவருமே சென்ற வரலாறுகள் இல்லை. நீதிமன்றில் செல்ல வேண்டிய தமிழரசுக்கட்சி உள்வீட்டு பிரச்சனைகளை இலங்கை நீதிமன்றில் நீதிக்காக வழக்குத்தாக்கல் செய்தால் உள்ளாட்டு பொறிமுறையை அந்த சட்டத்தை ஏற்பதாக கருதலாம் என்ற எழுதப்படாத விதியாக தமிழரசுக்கட்சி தலைவர்கள் உட்பட அந்த கட்சியில் இருந்த அனைவருமே அதனை கடைப்பிடித்த வரலாறுகளை காணலாம்.

தமிழரசுக்கட்சி

ஆனால் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சுக்கு எதிராக இலங்கை அமைச்சர்கள், மாற்றுத்தரப்புகள் தனிநாடு கேட்கும் கட்சி அதனை தடைசெய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்த பல சந்தர்பங்கள் உண்டு.

அப்படி மாற்று கட்சிக்காறர்கள் எதிர்கட்சியாளர்கள் தமிழரசுக்கட்சிக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளுக்கு மட்டும் தமிழரசுக்கட்சி நீதிமன்ற படிகளை ஏறிய வரலாறுகளே உண்டு. 

தந்தை செல்வா எந்த நோக்கத்திற்காக இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை ஆரம்பித்து அவர் இருக்கும்போதும், அவர் மறைவுக்குப் பின்னரும் இதுவரை எட்டுத்தலைவர்களை போட்டி பொறாமை இன்றி இணக்கப்பாடுடன் தலைவர்கள் ஜனநாயக முறையி்ல் தெரிவாகி கட்சியை சீராக முன்கொண்டு சென்றனர்.

74, ஆண்டுகளை கடந்தாலும் கட்சிக்குள் பல சண்டைகள், முரண்பாடுகள், கட்சியை விட்டு வெளியேறிய பலரின் பட்டியல்கள் உண்டு அவர்கள் எவருமே தமக்கு நியாயம் கேட்டு எந்த சந்தர்பத்திலும் இலங்கை நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்கவில்லை.

அது யாழ்பாணம் பேராசிரியர் சிற்றம்பலமாக இருக்கலாம் மட்டக்களப்பு செல்லையா இராசதுரையாக இருக்கலாம் கட்சிக்குள் முரண்பாடுகளை எதிர்கொண்டும் தானாக வெளியேறினர் அல்லது ஒதுங்கினர்.

வழக்கு தாக்கல்

அதுபோல் இளையவர்களான மன்னார் சிவகரன், யாழ் அனந்தி சஷிதரன் போன்றவர்களும் தமிழரசுக்கட்சிக்குள் சில முரண்பாடுகள் வந்தபோதும் அவர்களாகவே கட்சியின் முடிவுக்கு மாறாக எந்த சந்தர்பத்திலும் நீதிகேட்டு வழக்குப் போடவில்லை.   

இதுபோன்று இன்னும் பலர் கட்சியில் அதிருப்தியடைந்தாலும் எவருமே இலங்கை நீதித்துறையில் தமிழரசுக்கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை.

தமிழ் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பிரச்சினைக்கு இலங்கை நீதி வேண்டும்! யாரிடம் நோவோம்..! | Tamil Ethnic Problem Needs International Justice

அதற்கான காரணம் தாம் அதிருப்தியடைந்தாலும் தமது தாய்க்கட்சி என்ற உறுதியும் அந்த கட்சியின்மீது கொண்ட பற்றும் அவர்கள் வடகிழக்கு தாயகமண்டில் தமிழ்த்தேசிய கொள்கையுடன் வாழ்ந்ததுமே அதற்கு காரணம்.

இந்த இனப்பற்று இலங்கை நீதிமன்றில் கொண்டு செல்ல அவர்கள் எவருமே முன்வரவில்லை என்ற கடந்த கால கட்சி உறுப்பினர்களின் இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும்.

இன்று 75, வது பவள விழாக்காணும் கட்சியை ஒரு சாதாரண மகாநாடு புதிய தலைவர் நிர்வாகத்தெரிவு காரணமாக பதவி ஆசையால் இரண்டு அணிகளாக மாற்றி வெட்கம் இல்லாமல் அந்த கட்சியில் உள்ள ஆயுள்கால உறுப்பினர்களே பின்னணியில் இருந்து யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் வழக்கு தாக்கல் செய்துள்ளர்.

அவர்களின் வாதம் என்னவெனில் உபவிக்கு முரணாக பொதுச்சபை உறுப்பினர்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பு, மகாநாட்டுக்கான குறுகிய அழைப்பு, தெரிவுகளில் ஏற்பட்ட சில விடயகளை காரணம் காட்டி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிகிறது..    

ஆனால் கடந்த முள்ளிவாய்க்கால் போர் மௌனத்திற்கு முன்னர் 1973, வரை பன்னிரண்டு தேசிய மகாநாடுகளும்

1. 1951,ஏப்ரல்,13,14,15இல் திருகோணமலையில், தலைவராக தந்தைசெல்வா (யாழ்ப்பாணம், தெல்லிப்பழை)

2. 1953, ஜனவரி,01இல் யாழ்ப்பாணத்தில் தலைவராக தந்தைசெல்வா

3. 1955, ஏப்ரல்,16,17இல் திருகோணமலையில் தலைவராக கு.வன்னியசிங்கம் (யாழ்ப்பாணம் தெல்லிப்பழை)

4. 1956, ஆகஸ்ட்,17,18,19இல் திருகோணமலையில் தலைவராக கு.வன்னியசிங்கம்

5. 1957, யூலை,27,28இல் மட்டக்களப்பில் தலைவராக கு.வன்னியசிங்கம்

6. 1958, மே,23,24,25இல் வவுனியாவில் தலைவராக இராஜவோதயம் (திருகோணமலை)

7. 1961, ஜனவரி,21இல் யாழ்ப்பாணத்தில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம் (மட்டக்களப்பு மண்டூர்)

8. 1962, ஆகஸ்ட்,31இல் மன்னாரில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்

9. 1964, ஆகஸ்ட்,21,22,23இல் திருகோணமலையில் தலைவராக தந்தை செல்வா

10. 1966, யூன்,23,24,25இல் கல்முனையில் தலைவராக டாக்டர் நாகநாதன் (யாழ்ப்பாணம் தெல்லிப்பழை)

11. 1969, ஏப்ரல்,07,08,09இல் யாழ்ப்பாணம் உடுவிலில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்

12. 1973, செப்டம்பர்,07,08,09இல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் தலைவராக அ.அமிர்தலில்கம்

முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் நான்கு தேசிய மகாநாடுகளும் …

1. 2010, ஜனவரி,13இல் யாழ்ப்பாணம் நல்லூரில் தலைவராக இரா.சம்பந்தன்

2.. 2012, மே,26,27இல் மட்டக்களப்பில் தலைவராக இரா.சம்பந்தன்

3.. 2014, செப்டம்பர்,06,07இல் வவுனியா தலைவராக மாவை சேனாதிராசா

4. 2019, யூன்,29,30இல் யாழ்ப்பாணத்தில் தலைவராக மாவை.சேனாதிராசா.  

கட்சி யாப்புகள்

மொத்தம் 16, தேசிய மகாநாடுகளில் இருந்தை எட்டுத்தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் எட்டுத்தலைவர்களும் ஒருவர் இருவர் இரண்டு மூன்று மகாநாடுகளுக்கு பொதுச்சபை உறுப்பினர்கள் திரும்பவும் அவர்களை தலைவராக தெரிவு செய்த வரலாறுகளும் உண்டு.

அந்த மகாநாடுகளிலும் முழுமையாக கட்சி யாப்புகள் பின்பற்றவில்லை சில விடயங்கள் கட்சியாப்புக்கு அப்பால் இணக்கப்பாடுகளின் அடிப்படையில் பேசித் தீர்த்து நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்ற வரலாறுகள் உண்டு.

ஆனால் முரண்பாடுகள் ஏற்பட்டு கட்சிக்குள் பேசி ஒற்றுமையாக 74, வருடங்களாக தமிழரசுக்கட்சி தனித்துவமாக செயல்பட்டதை மறுதலிக்க முடியாது.

தமிழ் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பிரச்சினைக்கு இலங்கை நீதி வேண்டும்! யாரிடம் நோவோம்..! | Tamil Ethnic Problem Needs International Justice

அவ்வாறான ஒழுக்க விழுமியங்களை கொண்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி் தற்போதுதான் 17வது தேசிய மகாநாடு தலைவர் தெரிவு கடந்த 2024, ஜனவரி,21,,ல் வாக்கெடுப்பு மூலம் சிவஞானம் சிறிதரன் 184,வாக்குகளை பெற்று தலைவரானார்,

அவரை எதிர்த்துப்போட்டியிட்ட சுமந்திரன் 137, வாக்குகளும், சிறிதரனை ஆதரித்த யோகேஷ்வரன் எந்த வாக்குகளும் பெறவில்லை. இந்த வாக்கெடுப்பு தேர்தலால் இரண்டு அணிகள் உள்ளது என்பதை தலைவராக போட்டியிட்டு 137, வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்படாத உறுப்பினர் கடந்த ஜனவரி 27,ம் திகதி திருகோணமலையில் நடந்த மத்தியகுழு, மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் உறுதிப்படுத்தினார். 

தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதற்கு பின்னரே இரண்டு அணிகள் தமிழரசுக்கட்சிக்குள் உள்ளன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்திய நிலையில் தற்போது இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும்.

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்றம் தொடக்கம் சர்வதேச அரங்குவரை வெளிப்படையாக கூறிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தமது கட்சி உள்வீட்டு பிரச்சனைக்கு இலங்கை நீதித்துறையில் வழக்காடுவது இலங்கை நீதிமன்றில் நம்பிக்கை உண்டு என்பதை இந்த வழக்குப்போட பின்னணியில் நின்று செயல்பட்டவர்கள் ஏற்கிறார்களா? இது வெட்கமா? வேதனையா? அல்லது உனக்கில்லை உபதேசம் ஊருக்கு என்று சொல்வதா? சிந்தியுங்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி நுணாவில், நுணாவில்

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US