நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருக்கும் டி.ராஜேந்திரனுக்கும் இடையில் சந்திப்பு(Photo)
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த தமிழக பன்முக கலைஞரான டி.ராஜேந்திரன் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று(08) இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக டி.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது குணமடைந்து ஒய்வெடுத்து வருகின்றார்.
ஈழத் தமிழர்களின் போராட்டம்
இவர் ஈழத் தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு தனது தோழமையினையும் உறுதுணையினையும் வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு, பல போராட்டங்களையும் தமிழ்நாட்டில் முன்னெடுத்துள்ளார்.
சந்திப்பு
இந்த சந்திப்பில் நியூயோர்க் வாழ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழு உறுப்பினர்கள் லோகேஸ், கருணா, கமல், கலையரசி, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரவைத் தலைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
ஈழ விடுதலை போராட்டத்தின் மீதான தனது மன உணர்வுகளை டி.ராஜேந்திரன் உணர்ச்சிபூர்வமாக
வெளிப்படுத்தியுள்ளார்.





