விருந்தில் ஏற்பட்ட குழப்பம் - தமிழ் வைத்தியர் மற்றும் அவரது மனைவிக்கு நேர்ந்த கதி
சிலாபம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தியர் மற்றும் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இடம்பெற்ற விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான வைத்தியரும் அவரது மனைவியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருந்தில் ஏற்பட்ட குழப்பம்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றும் 33 வயதான சாமுவேல் ஜோன்சன் மற்றும் அவரது 20 வயது மனைவி சுப்ரமணியம் பிரித்திகா ஆகியோரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வைத்தியரின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது அங்கிருந்த ஒருவரே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
