கனடாவில் தமிழருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் பணம்
கனடா லொட்டரியில் 10 பேர் கொண்ட குழு ஒன்றிக்கு லொட்டரியில் பெருந்தொகை பரிசு தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த பத்து பேர் கொண்ட குழுவில் Mississauga-வை சேர்ந்த சந்திரௌதயன் செல்லத்துரை (Chandrauthayan Sellathurai) என்ற தமிழரும் இடம்பிடித்துள்ளார்.
10 பேர் கொண்ட நண்பர்கள் குழு
ஒன்றாறியோவை சேர்ந்தவர் அவாடிஸ் ஜம்ஜியான் என்பவரின் தலைமையிலான 10 பேர் கொண்ட நண்பர்கள் குழு லொட்டரி விளையாட்டில் சேர்ந்து ஈடுபடுவதை கடந்த 4 ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு மேக்ஸ் மில்லியன்ஸ் லொட்டரி பரிசாக $500,000 (இலங்கை மதிப்பில் ரூ. 13,54,02,969.50) கிடைத்துள்ளது.
பெருந்தொகை பரிசு பணம்
இதன்மூலம் சந்திரௌதயன் செல்லத்துரை என்பவருக்கும் பெருந்தொகையில் பரிசு பணம் கிடைத்துள்ளது.
மேலும், பரிசு பணத்தை வைத்து குடும்பத்தாருடன் கியூபாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவாடிஸ் கூறியுள்ள நிலையில் மற்றவர்கள் தங்கள் வெற்றிகளின் பங்கில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.