கனடாவில் தமிழ் தம்பதி ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு கைது
கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரொரன்ரோவில் ஆயுத முனையில், சொகுசு கார் ஒன்றை கடத்திச் சென்ற போது ஏற்பட்ட விபத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் பிரம்டன் பகுதியில் வைத்து அரச பேருந்து மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.
தமிழ் தம்பதி
இதனையடுத்து கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி உட்பட மூன்று பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

இதன்போது, சந்தேக நபர்கள் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன கொள்ளை
வாகனங்களை கொள்ளையிடுவது மற்றும் வீடுகளுக்கு புகுந்து திருட்டில் ஈடுபடுவது என்பன இவர்களின் பிரதான செயற்பாடாக அமைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இகைது செய்யப்பட்ட மூவரில் 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி, 33 வயதான அபிரா பொன்னய்யா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri