மலேசியாவில் நடந்த தமிழ் வர்த்தக மாநாட்டில் யாழ். பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் நடந்த மாநாட்டில் பங்குகொள்ள பல நாடுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், இலங்கையிருந்து பன்னிரண்டு சிறு தொழில் முயற்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பெண் முயற்சியாளர்
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டைக் கிராமத்தின் (J/133) சிறு தொழில் முயற்சியாளர் சிவராசா மரியறோசரி பிரதேசத்துக்குரித்தான பனைசார் உற்பத்திகள் மற்றும் ஏனைய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை மலேசியாவில் காட்சிப்படுத்தி, விளக்கமளித்து அனைவரதும் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இத்தகைய முன்மாதிரியாக தொழிற்படும் மரியறோசரியை பிரதேச செயலாளர், செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் அனைவரின் சார்பிலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று தொழில் முயற்சியாளர்களும் இந்த துறையிலே நிபுணத்துவத்துடன் தொழிற்பட்டு, பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam