லண்டனில் நடைபெறவுள்ள தமிழ் புத்தக கண்காட்சி
பிரித்தானியாவில் தமிழர்களுக்கென பிரத்தியேகமாக தமிழ் புத்தக கண்காட்சி நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி நாளை(17.06.2023) மற்றும் நாளை மறுதினம்(18.06.2023) காலை 11 மணி தொடக்கம் இரவு 7.30 வரை நடைபெற உள்ளது.
500 தலைப்புகளுக்கு மேற்பட்ட தமிழின் முக்கிய புத்தகங்களுடன் இரு நாள் நிகழ்வாக நடக்கவுள்ளது.
எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தவும், விற்கவும், வாசகர்களை சந்திப்பதற்கும், மற்றும் நூல்களை அறிமுகப்படுத்தவுமான ஏற்பாடுகள் உள்ளன.
வாசகர்கள், செயற்பாட்டாளர்கள், மொழி ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நூலாசிர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள்
கனடா, இந்தியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து பல எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக இந்த நூல் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர்களுக்கான தமிழ் வாசிப்பையும், கற்றலையும் ஊக்குவிக்கும் நூல்களும் அவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகளும் உள்ளன. இதுமட்டுமன்றி நூலறிமுகம், எழுத்தாளர் உரைகள், கவிதை வாசிப்பு, நாடக அளிக்கைகளும் உள்ளன.
இதேவேளை வாசகர்களுக்கு எந்த வகையான நூல்கள் தேவையோ அதனை முன்கூட்டியே தெரியப்படுத்தினால் இந்த நிகழ்வில் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
கண்காட்சி நடைபெறும் இடம்
London Tamil Book Fair. Grand View Hall, UNIT 1, 10 Stonefield Way, Ruislip HA4 0JS.
தொடர்புகளுக்கு 07817262980 (மொபைல் & வாட்ஸ்அப்).
இது தொடர்பிலான மேலதிக தகவல்களைப்பெற இங்கே அழுத்தவும் uchchi.com
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
