தமிழ் மற்றும் சிங்களவர்களிடையே இடம்பெற்ற மோதலுக்கு காரணம் இனப்பிரச்சினையா!வெளியான தகவல்(Video)
திருகோணமலை கடற்தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு இன ரீதியான முரண்பாடு அல்ல என மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
நீதவான் முன்னிலையில் இதனை தெரிவித்த போது அதற்கு சிங்கள சட்டத்தரணிகளும் அதனை ஆமோதித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலை திருக்கடலூர் விஜிதபுர பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள கடற்தொழிலாளர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கைகலப்பானது, இனப்பிரச்சினையை தோற்றுவிக்கின்ற முரண்பாடோ,குழப்பமோ அல்ல.
மேலும் இந்த கைகலப்பானது சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. ஒரே தொழிலை மேற்கொள்ளுகின்ற இரு தரப்புக்கு இடையில் தொழில் ரீதியாக இடம்பெற்ற கைகலப்பு மட்டுமே.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இந்த வாரத்திற்கான அரசியல் பார்வை நிகழ்ச்சி,



